சசிகலா குடும்பத்திடம் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்தவை என்ன ? – ராமதாஸ்

சசிகலா குடும்பத்திடம் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கிடைத்த பணம், நகைகள், ஆவணங்களின் விவரங்களை வெளியிட வேண்டுமென பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சசிகலா குடும்பத்தினர், பினாமிகளுக்கு சொந்தமான 187 இடங்களில் 5 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில், பறிமுதல் செய்யப்பட்டவை குறித்து வெளியான செய்திகளை பட்டிலிட்டுள்ளார்.

தற்போது சசிகலா குழுவினரின் வீடுகளில் நடந்த சோதனைகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், இதை வரி ஏய்ப்பாக மட்டும் பார்க்காமல் ஊழல் மற்றும் கூட்டுச்சதியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன