Advertisement
Advertisement

சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்

லெக்சஸ் சொகுசு கார் இறக்குமதி விவகாரம் தொடர்பாக வரிஏய்ப்பு செய்த வழக்கில், நடராஜனுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பிடியாணை பிறப்பித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து பழைய கார் என்று கூறி, புதிய லெக்சஸ் காரை இறக்குமதி செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அரசுக்கு வரிவருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகவும் சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. நடராஜன், வி என் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களுகு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ. முதன்மை அமர்வு நீதிமன்றம், 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.

இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய நடராஜன், பாஸ்கரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் விலக்கு பெற்றனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 4 பேருக்கும் பிடியாணை பிறப்பித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன