சக ராணுவ அதிகாரியின் மனைவியுடன் தவறான உறவு கொண்ட பிரிகேடியர் 4 ஆண்டுகள் பணி மூப்பை – ராணுவ நீதிமன்றம்

சக ராணுவ அதிகாரியின் மனைவியுடன் தவறான உறவு கொண்ட ராணுவ பிரிகேடியருக்கு 4 ஆண்டுகள் பணி மூப்பை இழக்கச் செய்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மலைப் பகுதி ராணுவப் பிரிவில் பிரிகேடியராக இருந்த ஒருவர், கலோனல் ஒருவரின் மனைவியுடன் தவறான உறவு கொண்டதை ஒப்புக்கொண்டார். இதனை விசாரித்த மேற்கு வங்க மாநிலம் பினாகுரியில் உள்ள ராணுவ நீதிமன்றம் அவரது பணி மூப்பில் 4 ஆண்டுகளை இழக்கச் செய்து தண்டனை வழங்கப்பட்டது. இதே போன்றதொரு வழக்கில் ஏற்கனவே மூத்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்தத் தண்டனை சாதாரணமானது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன