Advertisement

சகாயம் குழுவை கலைப்பது குறித்து 31-ம் தேதி முடிவு – உயர்நீதிமன்றம்

கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்கும் சகாயம் குழுவை கலைப்பது தொடர்பான முடிவு ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வுபெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ஊதிய நிலுவைத் தொகை அனைத்தும் வழங்கப்படும் என்றும், குழுவை கலைப்பது தொடர்பாக சகாயம் குழுவே கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, சகாயம் குழு சமர்பிக்க வேண்டிய கூடுதல் ஆவணங்களை சீல் வைக்கப்பட்ட கவரில், பதிவுத்துறையில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், குழுவை கலைப்பது தொடர்பான முடிவு ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன