கோவை பழமுதிர் நிலையங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள கோவை பழமுதிர் நிலையங்களில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

பல்பொருள் அங்காடிகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் உற்பத்தி தேதி, காலாவதி தேதி விலை உள்ளிட்ட விவரங்கள் பாக்கெட்டின் மீது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், எளிதில் நீக்கும் ஸ்டிக்கர்களாக ஒட்டக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. காலாவதியான பொருட்களை ஸ்டிக்கர் மாற்றி விற்பனை செய்யும் முறைகேடுகளைத் தடுக்க, உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைச் சட்ட விதி 2011 ஆகியவற்றின் படி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் உணவுப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார் தொடர்பாக சென்னையில் உள்ள கோவை பழமுதிர் நிலையங்களில் இன்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், வேளச்சேரி, கோபாலபுரம், தியாகராயநகர், சாலிகிராமம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அவற்றை அகற்றி விட்டு, விலை, தேதி, அளவு உள்ளிட்ட விவரங்களை உறையில் அச்சிட்டு பொருட்களுக்கு விற்பனை செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன