Advertisement
Advertisement

கோவில் ஆய்வுக்காகச் சென்ற கிரண்பேடியை முற்றுகையிட முயற்சி

புதுச்சேரியில் கோவில் ஆய்வுக்காகச் சென்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.

பண்டசோழநல்லூர் கிராமத்துக்கு கோவில் ஆய்வுக்காகச் சென்ற கிரண்பேடியிடம், ரேஷன் அரிசி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமை குறித்து கிராம மக்கள் முறையிட முயன்றனர். ஆனால் கிரண்பேடியை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், காவல்துறையினரின் தடுப்பையும் மீறி கிரண்பேடியை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து கிராம மக்களை சமாதானப்படுத்திய கிரண்பேடி, ஆய்வை நிறைவு செய்யாமலேயே அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன