கோலா கரடி சிக்கியது தெரியாமல் 16 கி.மீ., காரை ஓட்டி வந்த ஓட்டுநர்

ஆஸ்திரேலியாவில், ஓடும் காரின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டு துடித்த கோலா கரடி 16 கிலோ மீட்டர் பயணத்துக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. அடிலெய்டில் ஓட்டுநர் ஒருவர் காரை எடுத்துக் கொண்டு சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் பயணித்தார். அப்போது, உரோமம் கருகும் வாசனை வந்துள்ளது. அவ்வழியே சென்ற பிற பயணிகள், காரின் சக்கரத்துக்கு அருகில் கோலா கரடி சிக்கியிருப்பதாக ஓட்டுநரை எச்சரித்து வண்டியை நிறுத்தினர். பின், மீட்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். வலியால் துடித்து கண்கலங்கிய நிலையில் இருந்த கோலா கரடி, பொறுமையாகவும், பத்திரமாகவும் சக்கரத்தைக் கழற்றி மீட்கப்பட்டது.

சிறிய காயங்களுடன் உயிர் தப்பிய அந்த பெண் கோலா கரடிக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கெல்லி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கோலா, தன் வயிற்றில் ஒரு குட்டி கோலா கரடியையும் சுமந்திருந்தது. இதையடுத்து, கெல்லியை மருத்துவமனையில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன