கோரக்பூர் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகஸ்தர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பிஆர்டி ((BRD)) மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகஸ்தரை போலீசார் கைது செய்துள்ளனர். கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து, உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கில் BRD மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகித்து வந்த புஷ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரது சொத்துக்களை முடக்க ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் புஷ்பா சேல்ஸ் நிறுவன உரிமையாளர் மணிஷ் பண்டாரியை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!