Advertisement

கோயம்பேட்டில் போக்குவரத்தை சரிசெய்ய களம்இறங்கினார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று ஆயிரக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க ஏற்கனவே கோயம்பேடு, பூவிருந்தவல்லி, அண்ணா நகர் மேற்கு, சைதாப்பேட்டை மற்றும் தாம்பரம் சானடோரியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெளியே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் பேருந்துகள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் நீண்ட நேரம் ஆனது. மற்றொருபுறம் எந்தப் பேருந்து எங்கே வரும், எங்கு நிற்பது என்று தெரியாமல் பயணிகள் பரிதவிப்பில் இருந்தனர். இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், போலீசாருடன் சேர்ந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உரிய ஆதாரம் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சென்னையிலிருந்து மட்டும் இரண்டே நாட்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன