கோயம்பேடு மொத்த விலைச் சந்தையில், காய்கறிகளின் விலை குறைவு

சென்னை கோயம்பேடு மொத்த விலைச் சந்தைக்கு காய்கறிகளின் அதிக வரத்து காரணமாக விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளன.

புரட்டாசி மாத காலகட்டத்தில் மக்களின் ஒரு பிரிவினர் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள் என்பதால் காய்கறிகள் விலை உயர்வது வழக்கம். ஆனால் தற்போது காய்கறிகள் வரத்து அதிகமாக இருப்பதால் விலைகள் வெகுவாக குறைந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் 40 முதல் 50 சதவீதம் குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்ற பீன்ஸ் 35 ரூபாய்க்கும், 55 ரூபாய்க்கு விற்ற அவரை 40 ரூபாய்க்கும் 40 ரூபாய்க்கு விற்ற கத்தரி 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதே போன்று வெண்டை 20 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், முருங்கை 50 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் கேரட் 70 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளன. காய்கறிகள் விலை குறைந்துள்ளதை அடுத்து காய்கறிகளை வாங்கிச் செல்ல கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *