கோயம்புத்தூர்:விபத்து நடந்த கல்குவாரியின் உரிமம் ரத்து

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கல்குவாரியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குயிலியை அடுத்த பச்சபாளையத்தில் உள்ள கல்குவாரியில் இரு தொழிலாளர்கள் இறந்தனர். இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட கனகராஜ், முறைகேடாக நடைபெறும் கல்குவாரியை மூடவேண்டும் என்று வலியுறுத்தினார். முறையாக ஆய்வு நடத்தாத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அணிமாறப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், அந்த கல்குவாரிக்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை ரத்து செய்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன