கோபாலகிருஷ்ண காந்தி நாளை வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கோபாலகிருஷ்ண காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இடதுசாரி மற்றும் திரிணாமூல் போன்ற கட்சிகளின் தலைவர்களும் வேட்புமனு தாக்கலின் போது உடன் இருப்பார்கள் என்று கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன