கோட்டூர்புரம் அருகே ஆற்றில் குதித்தவரைத் தேடும் பணி 2வது நாளாக நீடிப்பு

சென்னை கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்த நபரைத் தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

நந்தனம் பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர் நேற்று மாலை கோட்டூர்புரம் பாலத்தில் இருந்து குதித்துள்ளார். கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்காக அவர் ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீயணைப்புப் படையினர், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!