Advertisement

கொள்கை இல்லாத காரணத்தால் வீரர்கள் ரத்தம் சிந்துகின்றனர்- ராகுல் காந்தி

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசிடம் எந்தவொரு தெளிவான கொள்கையும் இல்லாததே, ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்தக் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மூ காஷ்மீரில் பாஜக – பிடிபி கட்சி இடையிலான உறவு, ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியே என்றும் அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.

காஷ்மீரில் அரங்கேறும் தீவிரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தான் உரிய விலை கொடுக்க நேரிடும் என பாதுகாப்பு அமைச்சர் ஒருபுறம் எச்சரிக்கை விடுத்தாலும், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் அரசு கூறுவது முரண்பாட்டை காட்டுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன