கொல்லிமலை அருவியில் குளித்த 2 பேர் தவறி விழுந்து பலி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசில்லா அருவியில் குளித்த இரண்டு பேர் நீரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி மேலசந்தைபாளையத்தை சேர்ந்த ராஜேஸ்குமார் மற்றும் அவரது நண்பர் இளையராஜா ஆகியோர் உள்பட 4பேர் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள அருவியின் மேல் குளிக்க சென்ற ராஜேஸ்குமார், இளையராஜா ஆகியோர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வாழவந்தநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன