Advertisement
Advertisement

கொலை செய்யப்பட்டு உடலும் தலையும் தனித்தனியாக வீசப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் கொலை செய்யப்பட்டு உடலும் தலையும் தனித்தனியாக வீசப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளது.

திருவாலங்காடு அருகே புதர்ப் பகுதி ஒன்றில், கடந்த 14-ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் தலை, மறுநாள் வேறொரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போதும் பெண்ணின் அடையாளம் தெரியவராமல் இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது அந்தப் பெண் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரேவதி என்று தெரியவந்துள்ளது. 42 வயதான அவர் கணவரால் கைவிடப்பட்டவர் என்றும் 3 குழந்தைகளுக்கு தாய் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே பகுதியில் கடை வைத்திருந்த மாரி என்பவருடன் ரேவதிக்கு நட்பு இருந்து வந்துள்ள நிலையில், கொலை நடந்த அன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ரேவதியை அவர் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சம்பவம் நடந்த அன்று ரேவதியுடன் மாரி சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், மாரியுடைய செல்போன் அவருடைய இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தது. நகைக்காகவும், பாலியல் ரீதியாக அவரை சம்மதிக்க முடியாததாலும் இந்தக் கொலை நடந்ததிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலையில் ஒருவருக்கு மேற்பட்டவருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன