Advertisement

கொடைக்கானலில் சாலையை ஆக்கிரமித்திருந்த வாரச்சந்தை கடைகளை அகற்றி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வரும் வாகனங்களுக்கு இடையூறாக செயல்பட்டு வந்த வாரச்சந்தைக் கடைகள் அகற்றப்பட்டது.

கொடைக்கானலில் வாரந்தோறும் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை சந்தையானது, ஏழு ரோடு சந்திப்பில் இருந்து அரசு மருத்துவமனை வரையுள்ள தியாகராஜர் சாலையை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்தது. இதனால் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தக் கடைகளை அகற்றுமாறு தொடர்ந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் அப்பகுதியில் கடைகளை அமைக்கக்கூடாது என்ற அறிவிப்புப் பதாகைகளும் அங்கு வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன