கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைதான 10 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது கோத்தகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் 24 ம் தேதி காவலாளி ஒம்பகதூரை கொலை செய்து விட்டு கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த 10 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் 2 பேர் கேரள சிறையிலும். 8 பேர் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். க இந்நிலையில் கோத்தகிரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்பு 10 பேர் மீதும் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோத்தகிரி காவல் ஆய்வாளர் தாக்கல் செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன