Advertisement

கொச்சி கப்பல்கட்டும் துறையில், ONGC’யின் சாகர் பூஷன் கப்பலில் வெடிவிபத்து – 5 பேர் பலி

கொச்சி கப்பல்கட்டும் துறையில், பழுதுபார்ப்புக்காக நின்றிருந்த கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு பணியாளர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

பழுதுநீக்குதல் மற்றும் பராமரிப்பு பணிக்காக ஓஎன்ஜிசி-யின் சாகர் பூஷன் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. கடற்படுகை எண்ணெய் துரப்பணி பணிகளுக்கு பயன்படும் இந்த கப்பலில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, “பல்லாஸ்ட் டேங்க்” (ballast tank) எனப்படும் கப்பலின் எடையை நிலைப்படுத்த உதவும் தொட்டி வெடித்து, தீப்பற்றியுள்ளது. இதில் அங்கு பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 12 பேர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கப்பல்கட்டும் துறையில் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால், பணியில் இருந்தவர்கள் பெரும்பாலும் அன்றாடக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன