கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் தாமஸ் சாண்டி ராஜினாமா

கேரளாவில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்த புகாருக்குள்ளான போக்குவரத்துத் துறை அமைச்சர் தாமஸ் சாண்டி,தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், ஆலப்புழா மாவட்டத்தில் ஏரியின் நிலத்தை ஆக்கிரமித்து ரிசார்ட் கட்டியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் டி வி அனுபமாவின் அறிக்கையும், ஆக்கிரமிப்பு நடந்ததை உறுதி செய்தது. இதை எதிர்த்து தாமஸ் சாண்டி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அமைச்சரை கண்டித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தாமஸ் சாண்டி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, அமைச்சர்கள் 4 பேர் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த தாமஸ் சாண்டி ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன