கேதார்நாத் கோயிலை சீரமைக்க மோடிக்கு அனுமதி மறுப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலை சீரமைக்க மோடி, உதவி செய்ய முன்வந்தபோது, அதை நிராகரிக்குமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக, உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் விஜய் பகுகுனா தெரிவித்துள்ளார்.

கேதார்நாத் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, 2013ஆம் ஆண்டு கேதார்நாத் கோயில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதையும், அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த தாம், கோயிலை சீரமைக்க உதவி செய்ய முன்வந்ததாகவும் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் முதலமைச்சராக இருந்த விஜய் பகுகுனா உதவியை ஏற்றுக்கொண்டபோதும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கட்டாயப்படுத்தியதால், தனது உதவி நிராகரிக்கப்பட்டதாகவும் மோடி கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் பகுகுனா, மோடியின் உதவியை தான் ஏற்றுக்கொண்டபோது, அதை நிராகரிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டதாக கூறினார்.

தற்போது தான் காங்கிரஸ் கட்சியில் இல்லாததால், அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன