குழந்தையை அமரவைத்து தள்ளிச் செல்லும் ஸ்ட்ரோலர் எனும் நகரும் நாற்காலி, ரயிலில் சிக்கியது

பிரிட்டனில் குழந்தையை அமரவைத்து தள்ளிச் செல்ல உதவும் ஸ்ட்ரோலர் எனும் நகரும் நாற்காலி, ரயிலில் மோதிச் சிதறும் காட்சிகள் வெளியாகியுள்ளது. நுனியேட்டன் (Nunneaton) ரயில் நிலையத்தில் சுவர் ஓரத்தில் ஸ்ரோலர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு ரயில் ஒன்று அதிவேகமாக கடந்தது. பிரேக் போடப்பட்டிராத அந்த ஸ்ட்ரோலர், திடீரென நகர்ந்து வந்து ரயில் மீது மோதியதில், அது சிதறியது.

அதிர்ஷ்டவசமாக அதில் குழந்தை இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்நிலையம் ஆபத்தான இடம் என்றும், பெற்றோர் அருகிலின்றி குழந்தையை ஸ்ட்ரோலரில் விட்டுச் சென்றால் என்ன நேரும் என்பதற்கான முன் உதாரணம் இது என்றும் வீடியோவை வெளியிட்ட பிரிட்டன் ரயில்வே பாதுகாப்பு வாரியம் எச்சரித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன