குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த அமெரிக்க அதிபரின் மனைவி

அமெரிக்க அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப், பள்ளிச் சிறுவர்களுடன் உரையாடியபோது தம் கணவரின் நடனத் திறமை குறித்து நகைச்சுவையாக பேசினார். ஆன்ட்ரூஸ் யூத் சென்டர் என்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பயிலும் பள்ளியில் குழந்தைகளுடன் மெலனியா டிரம்ப் உரையாடினார்.

அப்போது ஒரு சிறுவன் மெலானியாவிடம் சென்று தாம் டிரம்பின் நடனத்தைப் பார்த்ததாகக் கூறினார். அது நகைச்சுவையாக இருந்ததா என கேட்டபோது, சிறுவன் அந்த வீடியோவை அவரிடம் காண்பித்து மகிழ்ந்தார். மேலும், குழந்தைகளுடன் காகித விமானங்களை செய்து அதைக் கொண்டு விளையாடியும் மெலனியா அளவலாவினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன