Advertisement

குளிர்கால ஒலிம்பிக்கில் ஒரே கொடியுடன் வட – தென்கொரிய நாடுகள் அணிவகுப்பு

குளிர்கால ஒலிம்பிக்கில், வட கொரியாவும், தென்கொரியாவும், ஒரே கொடியுடன் அணி வகுப்பில் ஈடுபட ஒப்புக் கொண்டுள்ளன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறுகின்றன. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இதில் கலந்து கொள்ள வடகொரியா சம்மதம் தெரிவித்தது.

இதுதொடர்பாக மற்றுமொரு பேச்சுவார்த்தை புதன் கிழமை நடைபெற்ற போது, ஒலிம்பிக் தொடக்கத்தின் போது நடக்கும் அணிவகுப்பில் தனித் தனி கொடிகளுடன் அல்லாமல், ஐக்கிய கொடியுடன், இரு நாடுகளும் அணி வகுப்பில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன