குல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை நிராகரித்தது பாக். ராணுவ நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளது.

தீர்ப்பு வரும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவின் கருணை மனுவை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவித் பஜ்வாவுக்கு ((Qamar Javed Bajwa)) அனுப்பப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவின் கருணை மனு பரிசீலிக்கப்படுகிறது.

உரிய முறையில் ஆதாரங்களை ஆய்வு செய்து கருணை மனு மீது ராணுவத் தளபதி முடிவெடுப்பார் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!