குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்புக்கான சிறப்பு அறை அமைக்க உத்தரவு

குற்றவாளிகளின் அடையாள அணிவகுப்புக்கு அனைத்து சிறைகளிலும் சிறப்பு அறை அமைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, சாட்சிகளின் வாக்குமூலங்களை நடுவர் நீதிமன்றங்களிலிருந்து பெறுவது தாமதமாவதால், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் பெற்றுவிடுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வாக்குமூலங்களைப் பதிவுசெய்யும் நடுவர் நீதிமன்றங்கள், அவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களை புலன் விசாரணை அதிகாரிக்கு வழங்கலாம் என தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில், அடையாள அணிவகுப்பு நடத்த ஏதுவாக அனைத்து சிறைகளிலும், சாட்சிகளை கைதிகள் பார்க்க முடியாத கண்ணாடியிலான சிறப்பு அறையை ஆறு மாதங்களில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!