Advertisement

குற்றம்புரிபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் குற்றம் புரிபவர்கள் சிறையில் தள்ளப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற போது, குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத்தான் முதல் சவாலாக எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார்.

முன்பிருந்த ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகமாக இருந்ததால் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், இளைஞர்கள் உத்தரப்பிரதேசத்தை விட்டே ஓட்டம் பிடித்ததாகவும், ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு குற்றம் புரிபவர்களுக்கு தமது ஆட்சி கடுமையான சூழலை உருவாக்கி இருப்பதாகவும் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

குற்றம்புரிபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், இல்லை என்றால் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

One Response to குற்றம்புரிபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

  1. M.Thulasiraman சொல்கிறார்:

    மத்திய பிரதேச முதல்வர் கூறியது முற்றிலும் ஏற்கக்கூடியது . நாட்டில் கொலை கொள்ளை கற்பழிப்பு லஞ்சம் தலை விரித்தாடுகிறது. மேலும் அரசியல்வாதிகள் பொதுமக்களை மிரட்டி தாங்கள் சம்பாதித்து வைத்துள்ள கருப்பு பணத்தில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றனர் . மேற்கண்ட குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும். மேற்கண்ட குற்றங்கள் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்போடுதான். நடக்கின்றது, அதனால் அரசியல் வாதிகள். மரண தண்டனை கூடாது என்று ஆட்சேபனை செய்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன