குர்மித் ராம் ரஹீமுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள்? – ஜாமினில் வெளிவந்த சிறைவாசி குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை வழக்கில் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீமுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக ஜாமினில் வெளிவந்த கைதி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராம் ரஹீம் மற்ற கைதிகளைப் போல் சிறையில் எந்த வேலையும் செய்து தாம் பார்த்ததில்லை என்று ராகுல் என்ற கைதி தெரிவித்துள்ளார். ராம் ரஹீம் சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல், தங்களுக்கு அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தாகவும் அவர் கூறியுள்ளார். மற்ற கைதிகளின் உறவினர்கள் வரும் போது அனுமதிக்கப்படும் நேரத்தைக் காட்டிலும் ராம் ரஹீமை பார்க்க வருபவர்கள் சிறைக்குள் அதிக நேரம் அனுமதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள ராகுல், இதுவரை சிறைக்குள் தாம் ராம் ரஹீமை பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன