குர்மித் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்துக்கு போலீஸ் வலை

சாமியார் குர்மித் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத்தின் இருப்பிடத்தை அறிய அவரது கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மித்தின் வளர்ப்பு மகளான ஹனிபிரீத் கவுரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஹனிபிரீத்தின் இருப்பிடம் பற்றி அறிய, அவரது கார் ஓட்டுநர் பிரதீப் குமார் என்பவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சலசார் என்ற இடத்தில் பதுங்கியிருந்த பிரதீப் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். குர்மித் ராம் ரஹீமின் குற்றச் செயல்களுக்கு ஹனிபிரீத் உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!