கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை

கும்பக்கரைஅருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. \

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

 

அபாய அளவைத்தாண்டி நீர்வரத்து இருப்பதால், அருவியில் குளிக்க தடை இன்னும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன