Advertisement

குன்னூர்: மலைவாழ் மக்களின் கோயிலை இடித்துத் தள்ளிய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைகிராமத்தின் அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகள், மலைவாழ் மக்களின் கோயிலை இடித்து தள்ளின.

அண்மையில் பெய்த மழையால், பர்லியார், மரப்பாலம், தூரிப்பாலம் ஆகிய இடங்களில் கோரைப்புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதை உண்ணவும், காற்றில் பரவும் பலாப்பழங்கள் பழுக்கும் வாசத்துக்காகவும் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவற்றின் வழித்தடத்தை மறித்து தனியார் தோட்டங்களில் மின்வேலிகள் போடப்பட்டுள்ளதால், யானைகள் பாதையை விட்டு விலகியுள்ளன. மலைவாழ் மக்கள் வசிக்கும் குரும்பாடி கிராமத்தில் நுழைந்த யானைகள், அவர்கள் வணங்கும் சிறிய கோயிலை இடித்து தரைமட்டமாக்கியது. இவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன