Advertisement

குன்னூரில் இதமான சூழலால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ண வண்ண மலர்களைக் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து தற்போது இதமான காலநிலை நிலவிவருகிறது. குன்னூரில் சில்லென குளிர் காற்று வீசுவதுடன், சிம்ஸ் பூங்காவில் டேலியா, குண்டு மல்லி, பேன்சி,ரோஜா, ஆகிய மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றின் அழகை ரசித்தபடி சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் பொழுதைக் கழித்தனர். மினி ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன