குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி ஆலோசனை

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப்பை பிரதமர் சந்தித்துப் பேசியதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து அங்கு புதிய அரசுகள் பதவியேற்றுள்ளன. மேலும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரணாப்- மோடி சந்திப்பின்போது இதுபற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன