குடிநீர் வினியோகம் செய்யப்படாததைக் கண்டித்து சாலைமறியல்

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி குடிநீர் வாரியத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலிசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!