குஜராத் மக்கள் 22 ஆண்டு வளர்ச்சிக்கான சி.டி.யை பார்க்க விருப்பம் – ஹர்திக்

குஜராத் மக்கள் 22 ஆண்டு வளர்ச்சிக்கான சி.டி.யையே பார்க்க விரும்புவதாகவும், 22 வயது பையனின் சி.டி.யை அல்ல என்றும், ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.

படேல் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும், ஹர்திக் படேல், குஜராத் மாநில தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ஹர்திக் படேல், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற சிடி வெளியிடப்பட்டது. தற்போது 2வது சி.டியும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஹர்திக் பட்டேலும், இன்னொரு நபரும், பெண் ஒருவருடன் படுக்கையில் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அந்தரங்க சி.டி. தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்திக் படேல், குஜராத் மக்கள் 22 ஆண்டுக்கான வளர்ச்சியை பார்க்க விரும்புவதாகவும், 22 வயது பையனின் சி.டி.யை அல்ல என்றும் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன