Advertisement

கிருஷ்ணகிரி: கோயில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் விழா போட்டியில் சீறிப் பாய்ந்தோடிய காளைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எருதுவிடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கொழும்பூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருதுவிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டன. போட்டி தொடங்கியதும் அவிழ்த்து விடப்பட்ட காளைகள், சீறிப்பாய்ந்தோடியதை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன