கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து நீர்திறப்பு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களில் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேஆர்பி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 798 அடியாக உள்ள நிலையில் அணை நீர் மட்டம் 50 புள்ளி 45 அடியாக உள்ளது.நேற்று அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 145 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று வினாடிக்கு 4 ஆயிரத்து 644 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்கக் கூடாது என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன