கிரீன் டீ எஸ்டேட் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பிடும் பணி நீடிப்பு

கோடநாடு அருகே கிரீன் டீ எஸ்ட்டேடில் நேற்று மாலை சோதனையை முடித்த வருமான வரித்துறையினர், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு மற்றும் கர்சன் பகுதியில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டில் கடந்த 9ஆம் தேதி சோதனையை தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று மாலையில் சோதனையை நிறைவு செய்தனர். வருமான வரிச்சோதனையின்போது, கணக்கில் வராத பல சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

அவற்றின் உண்மையான மதிப்பை ஆய்வு செய்து வரும் வருமான வரித்துறை அதிகாரிகள், இன்றும் டீ எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரீன் டீ எஸ்டேட்டுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்கு உள்ளது என்றும், எஸ்டேட்டில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், மாதாந்திர வரவு – செலவு ஆகியவை குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன