கிரானைட் மோசடி குறித்த வழக்கை விசாரிக்கும் சகாயம் குழுவிற்கு சம்பளம் வழங்கவில்லை என புகார்

கிரானைட் மோசடி குறித்த வழக்கை விசாரிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குழுவில் உள்ள அதிகாரிக்கு, 8 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என்பது தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வுபெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அவருக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், முறைகேடு தொடர்பாக புகார்கள் பெற அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு நிர்வாக செலவுகளுக்கு பணம் வழங்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.

இதை மனுவாக தாக்கல் செய்யவிருப்பதாகவும் சகாயம் தரப்பு வழக்கறிஞர், அதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன