காஷ்மீர் நிலவரத்தை ஆராய்கிறது காங்கிரஸ் கட்சியின் கொள்கைத் திட்டக்குழு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் குழு ஜம்மு காஷ்மீர் சென்று அங்குள்ள நிலையை ஆய்வு செய்துள்ளது.

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என்று இக்குழு ஜம்மு காஷ்மீர் அரசையும் மத்திய அரசையும் வலியுறுத்தியுள்ளது.இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் வந்த காங்கிரஸ் கட்சியின் குழு அங்குள்ள வன்முறைகளுக்கான காரணங்களை அறிய முயன்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அம்பிகா சோனி உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகளுடன் இக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன