Advertisement
Advertisement

காஷ்மீரில் பாக்., அத்துமீறி தாக்குதல்-இந்திய ராணுவ வீரர் உள்ளிட்ட இருவர் பலி

காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அவ்வப்போது இந்திய நிலைகள் மீதும், எல்லையோரக் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இன்று பாகிஸ்தான் படைகள் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட்டி செக்டார் பகுதியில் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திவருகின்றன. இந்த சண்டையில் இந்திய பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தான் படைகளின் துப்பாக்கி குண்டு பாய்ந்து பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன