காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

50க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் புறப்பட்ட பேருந்து, ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ராம்பன் மாவட்டம் நச் நல்லா என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. கவிழ்ந்த வேகத்தில் பல அடி தூரத்துக்கு பேருந்து உருண்டதால் உள்ளே இருந்த பயணிகள் அலறித் துடித்தனர். இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த பயணிகளில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர்.

தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர், கயிறுகளின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதுவரை காயம் அடைந்தவர்களில் 30 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் பதிவெண் கொண்ட பேருந்து என்பதால், அதில் பயணித்தவர்கள் அனைவரும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!