காலாவதிக்கு முன்பாகவே குப்பையில் வீசப்பட்ட அரசு மருந்துகள் – ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள M.மறவர்பெருங்குடி கிராமத்தில், அரசு மருத்துவமனைக்கு சொந்தமான மருந்துகள் குப்பைகளில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. M. மறவர் பெருங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே திறக்கப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், M. மறவர் பெருங்குடி கிராமத்தில் உள்ள ஓடை பாலத்தின் அடியில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் கொட்டப்பட்டுள்ளன. காலாவதியாவதற்கு முன்பாகவே மருந்துகள் குப்பைகளில் வீசப்பட்டுள்ளன.

இந்த மருந்துகள் எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கொட்டப்பட்டவை, காலாவதி தேதிக்கு முன்னதாகவே குப்பையில் வீசப்பட காரணம் என்ன என்பது பற்றி சுகாதாரத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *