கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, பாலா, வரைந்த கார்ட்டூன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை மாநகர காவல் ஆணையர் கபில்குமார் ஆகியோரை மிகவும் அவதூறு செய்யும் வகையில் இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாலா தற்போது ஜாமீனில் உள்ளார்.

இந்நிலையில் தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கார்ட்டூனிஸ்ட் பாலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், வழக்கு தொடர்பாக நவம்பர் 29ஆம் தேதிக்குள் நெல்லை மாவட்ட ஆட்சியர், குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன