காமராஜர் பல்கலைகழகத்தில் பேராசிரியை ஜெனிபாவுக்கு கத்திக்குத்து

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியை ஜெனிபாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற, முன்னாள் கவுரவ விரிவுரையாளர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். மதுரைக் காமராஜர் பலகலைக் கழகத்தில், இதழியல் துறை துறைத்தலைவரக ஜெனிஃபா பணியாற்றி வருகிறார்.

இன்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்ற ஜெனிஃபா, பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், பேராசியர் ஜெனிஃபாவின் கழுத்து, முதுகு, ஆகிய இடங்களில் சராமரியாகக் குத்தினார்.

இதில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்த ஜெனிஃபா அங்கேயே மயக்கமடைந்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பேராசியர்கள் ஜெனிஃபாவை மீட்டு, மதுரை வடமலையான் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தப்பியோடிய நபரை அருகிலிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மடக்கிப் பிடித்து நாகமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஜெனிஃபாவைக் கொலை செய்ய முயன்றது மதுரையைச் சேர்ந்த ஜோதிமுருகன் என்பதும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக அவர் முன்னர் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. கொலை முயற்சிக்கான காரணம் குறித்து ஜோதிமுருகனிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன