காதல் திருமணம் செய்த உடுமலை சங்கர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு, டிசம்பர் 12ந் தேதி தீர்ப்பு

உடுமலையில் காதல் திருமணம் செய்த சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என திருப்பூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணும் சாதியை பொருட்படுத்தாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் உடுமலையில் வைத்து கடந்த ஆண்டு மார்ச் 13ந் தேதி மனைவி கவுசல்யா முன்னிலையில் சங்கர், பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவானது.

கொலை சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் பெற்றோர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வழங்கப்படுமென நீதிபதி அல்மேலு நடராஜன் தெரிவித்துள்ளா.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன