Advertisement
Advertisement

காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக்கொலை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக்கொலை செய்த வழக்கில், கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி 2வது குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த அமலன் அதே பகுதியை சேர்ந்த சத்தியப்பிரியா என்பவரை காதலித்துள்ளார். காதலை ஏற்க மறுத்ததால், சத்தியப்பிரியாவை கடந்த 2013 ஆம் ஆண்டு, அமலன் வெட்டிக்கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி இரண்டாவது குற்றவியல் நீதிமன்றதில் நடந்து வந்த நிலையில், முக்கிய சாட்சியாக இருந்த சத்தியப்பிரியாவின் தந்தை கலியப்பெருமாளையும், கடந்த ஜுன் மாதம் அமலன் கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சத்தியப்பிரியா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கலியப்பெருமாளை கொலை செய்த மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன