Advertisement

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

சென்னை நீலாங்கரையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டிய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நீலாங்கரை அருகேயுள்ள வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த 22 வயதான இளம் பெண் ஒருவர் தனியார் கல்லூரியொன்றில் பி.காம் இரண்டாமாண்டு பயின்று வருகிறார்.

பேஸ்புக் மூலம் மாணவிக்கு அறிமுகமான துரைப்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய் முதலில் நண்பராக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் மாணவியை காதலிப்பதாக தெரிவித்த சஞ்சய் அவரை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சஞ்சயின் தொடர்பை துண்டித்துள்ளார்.

ஆத்திரமடைந்த சஞ்சய் கல்லூரி மாணவியின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவரது புகைபடங்களை எடுத்து அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்துள்ளார், அந்த படத்தை மாணவிக்கு அனுப்பி தன்னை காதலிக்கவில்லை என்றால் பேஸ்புக்கில் பதிவிட்டு அசிங்கப்படுத்துவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவி இது குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, விசாரணை நடத்திய போலீசார் ஒக்கியம் துரைப்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்த சஞ்சயை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சஞ்சயும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு பயின்று வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன