Advertisement

காட்பாடி அருகே மஞ்சுவிரட்டில் பங்கேற்று ஓடிய காளைகள்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் மஞ்சுவிரட்டுப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட காளைகளை மக்கள் கூட்டத்தின் நடுவே வீதியில் ஓடவிட்டனர். குறிப்பிட்ட தூரத்தை அதிவிரைவாக ஓடிக்கடந்த காளைக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

மஞ்சுவிரட்டைக் காண வேலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாலையின் இரு புறமும் நின்ற இளைஞர்கள் சிலர் ஓடும் காளைகளை அடிக்க முயன்ற போது காளைகள் மிரண்டு தாக்கின. இதில் 5 பேர் காயமடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன