இல்லாத குளத்தை தூர்வாரி சீரமைக்க ரூ. 2 லட்சம் ஒதுக்கீடு

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இல்லாத ஒரு குளத்தை தூர்வார 2 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியதாக பேரூராட்சி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இடைக்கழிநாடு பேரூராட்சியின் பனையூர் பெரியகுப்பம் கிராமத்தில் குளம் ஒன்று இருப்பதாகவும், இதை சீரமைக்க வினோத்குமார் என்பவருக்கு 2 லட்சம் ரூபாயை ஒதுக்கி ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

இப்பணிகள் நிறைவடைந்ததாக, ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தில், வீரராகவன் என்பவர் இந்த விவரங்களைச் சேகரித்துள்ளார்.

இதையடுத்து, பேரூராட்சி நிதியை கையாடல் செய்த செயல் அலுவலர், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன